
தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களாக சினிமாவில் நிலைத்து இருக்கிறார். கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். இந்தி, தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், தேசிய அளவில் இதுவரை அவருக்கு விருதுகள் கிடைக்கவில்லை.
வர்ஷம் தெலுங்கு படம் தேசிய அங்கீகாரத்தை பெற்று தரும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. மாநில அளவில் மட்டுமே அவர் கௌரவிக்கப்பட்டு உள்ளார்.
வித்யாபாலன் இவருக்கு பிறகுதான் சினிமாவுக்கு வந்தார். அவருக்கு ‘டேட்டி பிக்சர்’ படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அத்துடன் உயரிய பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தன்னை புறக்கணிப்பதாக நெருக்கமானவர்களிடம் திரிஷா வருத்தப்பட்டு பேசி வருகிறாராம்.





