வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

1314


பொங்கல் நிகழ்வுகள்..வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம் , நகர் பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களிலும் இன்று (14.01.2022) காலை பொங்கல் பொங்கியதுடன் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
அத்துடன் குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.