அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டு விலைகளின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் சம்பாவின் விலை 77 ரூபாவாகும். நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 66 ரூபாவாகும். சிகப்பு பச்சை அரிசி 60, வெள்ளை பச்சை அரிசி 68 ரூபாவாகும்.
அண்மையில் அரிசிக்கான விலைகள் 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விவகார அமைச்சு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட உள்ளது. பண்டிகைக் காலத்தில் வர்த்தகர்கள் அரிசிக்கான விலைகளை நினைத்தவாறு அதிகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அரிசி இறக்குமதிக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டுள்ளன. ஐந்து ரூபா விசேட வரி ஒன்று மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.