வவுனியாவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் பொங்கல் நிகழ்வு!!

929


பொங்கல் நிகழ்வு..வடமாகாண விமல் அணி ஏற்பாட்டில் அமைச்சர் விமல்வீரவன்சவின் திட்டமிடலுக்கு அமைய வவுனியாவில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.அமைச்சரின் வன்னி மாவட்ட இணைப்பு செயலாளர் புஸ்பதேவா  வழிகாட்டலில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் குறித்த பொங்கல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இயற்கை பசளை இட்டு விளைவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியில் பொங்கல் நடைபெற்றது.


பௌத்த, இந்து, கத்தோலிக்க மத தலைவர்கள் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதில், நகரசபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா சு.குமாரசாமி, வர்த்தக சங்க செயலாளர் அம்பிகைபாகன், மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் சிறிதரன், வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுபதிகாரி அழகியவண்ண , வடமாகாண விமல் அணி தலைவர் சி.ஜோதிக்குமரன் , விமல் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.