மாவனல்லை உஸ்ஸபிட்டிய, அலுபத பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் மஞ்சள் மழை பெய்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பி.ப 2.45 மணியளவில் பெய்த மழை நீரில் மஞ்சள் நிறமுடையதாக காணப்பட்டதாகவும் அவற்றை பிரதேசவாசிகள் சேமித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.