மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்!!

440

Babyநிக்கவெரட்டிய – பலகொல்ல பிரதேசத்தில் கிணற்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாத வயது நிரம்பிய சிசுவின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசுவின் தாயே சிசுவை கிணற்றில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.