ஜேர்மனியில் காணாமல் போன கர்ப்பிணி மாடுகளைத் தேடும் பொலிசார்!!

278

cow

ஜேர்மனியில் கர்ப்பிணி மாடுகள் காணாமல் போனதால் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் நேற்று முன் தினம் பால் பண்ணை ஒன்றிலிருந்து ஏழு கர்ப்பிணி மாடுகளை, கால்நடை திருடர்கள் திருடிவிட்டதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இதுவரை ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு மாடுகள் மட்டுமே காணாமல் போவது வழக்கம்.

ஆனால் இப்போது 7 மாடுகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாடுகளின் உரிமையாளர் கார்டஸ் கூறுகையில், அந்த 7 மாடுகளும் மற்ற மாடுகளை விட கர்ப்பமுற்று பெரியதாக இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர் என்றும் இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களில், அந்த மாடுகள் குழந்தைகளை பெற்றெடுத்து விடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது தனக்கு நிகழ்ந்த பெரிய இழப்பாகும் என மாடுகளின் உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தேடுதலில் ஈடுபட்ட பொலிசாருக்கு இந்த மாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் ஒன்று கிடைத்துள்ளது.