நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவைத்தான் எடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
மதுரையில் தங்கபாலு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையில் செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
மத்தியில் அதிமுக ஆட்சி அமையும் என்று பேசி வந்த ஜெயலலிதா, இப்போது ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்று கூறி வருகிறார். இது, தேர்தலில் அவரின் பின்னடைவை காட்டுகிறது. மேலும், ரஜினி ஒரு நல்ல ஆன்மீகவாதி, அவர் நல்ல முடிவைத்தான் எடுப்பார் என்று கூறியுள்ளார்.




