குஷ்புவுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை : நடிகை விந்தியா!!

513

Kushboo

நடிகை குஷ்பு, தொகுதி நடவடிக்கைகள் மற்றும் விவரங்கள் எதுவும் தெரியாமல் பேசுவதாக விந்தியா கூறியுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை விந்தியா நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர், மத்தியில் ஆளும் காங்கிரஸை அகற்றி விட்டு ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

கரூருக்கு வாக்கு சேகரிக்க வந்த குஷ்பு தொகுதியின் நடப்புகள் எதுவும் தெரியாமல் பேசி சென்றுள்ளார். தற்போது நாட்டில் கொலை, கொள்ளை அதிகம் நடப்பதாக பேசியுள்ளார்.

ஆனால் தேசிய குற்ற காப்பகத்தின் அறிக்கையின்படி 2012–13ம் ஆண்டில் இந்திய அளவில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கரூருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில் பாலாஜியும், எம்.பி.யாக உள்ள தம்பிதுரையும் செய்துள்ளனர். இதனால் கரூர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மேலும், காவிரி நதிநீர் பிரச்சனையில் ஜெயலலிதா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் காலம் போய் விரைவில் கட்டளை இடும் காலம் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.