வவுனியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு அமுலாகும் நடைமுறை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

4680

மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு..

வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இலக்கத்தகடு , வாகன வருமான உத்தரவு பத்திரம் , காப்புறுதி , தலைக்கவசம் , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன தேவையற்ற நிலையில் காணப்பட்டதுடன்,

தற்போது குறித்த ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர தெரிவித்தார்.

மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.

இந்நிலையில் இனிவரும் காலங்களில் இலக்கத்தகடு , வாகன வருமான உத்தரவு பத்திரம் , காப்புறுதி , தலைக்கவசம் , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாவும் அதனை மீறி செயற்படும் மின்சார மோட்டார் சைக்கில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மேலும் வவுனியா பல இடங்களில் பரவலாக குறித்த மின்சார மோட்டார் சைக்கில்களை விற்பனை முகவர்கள் எவ்வித ஆவணங்கள் , தலைக்கவசம் என்பன தேவையில்லை என மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளப்படுகின்றது எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.