ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ விருது வழங்கலாம் : விஜயகாந்த் ஆவேசம்!!

723

Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணி என்ற விருது வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேமுதிக வேட்பாளர் வேலுவை ஆதரித்து பேசிய விஜய்காந்த், நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரியில் லாரி தொழிலாளர்கள் அதிகம். அதற்கான நல வாரியம் அமைக்குமாறு, பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.

கிட்டதட்ட 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை கட்டிதருவதாக கூறினார் ஜெயலலிதா ஆனால், பணிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் வளர போதிய அளவு மின்சாரம் கிடைப்பதில்லை அதனால் ஜவுளித்தொழில் பெரிதும் முடங்கியுள்ளது.

கடந்த 17 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் ஜெயலலிதா, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார். அவருக்கு, வாய்தா ராணி என்ற விருது கொடுக்கலாம் என பேசியுள்ளார்.