வவுனியாவில் முச்சக்கரவண்டி – துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து : பெண் ஒருவர் படுகாயம்!!

1855

விபத்து..

வவுனியா குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி – துவிச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாகுருமன்காடு பகுதியில் இதுருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த பெண் ஒருவர் காளி கோவிலடி வீதிக்கு திரும்பிய போது மன்னார் வீதி வழியாகக வந்த முச்சக்கர வண்டி குறித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.