வவுனியாவின் உயர்கல்வி கல்வி வளங்களில் ஒன்று அழிவின் விளிம்பில்!!

3500

உயர்தொழிநுட்பவியல் நிறுவகம்..

வவுனியா மாவட்டத்தின் ஒமந்தை பகுதியில் 2015 ஆண்டிலிருந்து இருந்து வெற்றிகரமாக இயங்கி வந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது.

2020 ஆண்டு வரையும் HNDA, HNDIT, HNDE ஆகிய மூன்று பாடநெறிகள் காணப்பட்டது. தற்போது HNDIT பாடநெறி நீக்கப்பட்டு HNDA மற்றும் HNDE ஆகிய பாடநெறிகள் மட்டுமே காணப்படுகின்றது.

இம்முறை 2021 கல்வியாண்டிற்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பு நடைபெறும் வேளையில், இலங்கை முழுவதும் 20000  மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்க பெற்ற வேளையிலும் ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் பாடநெறியை தொடங்குவதற்கு தேவையான மாணவர் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணத்தால் ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவகம் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

2020 மற்றும் அதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியும். இங்கு முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக கற்றுக்கொள்ள முடியும்.

இங்கு கற்கைநெறிகளை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதன் மூலம் வருங்காலகளில் கல்வி கற்ற உள்ள எமது மாணவர்களும் பாதிக்கபடுவார்கள் .

2015ம் ஆண்டிற்கு முன்னர் HNDA பாடநெறி கற்பதற்காக எம்மவர்கள் பலர் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தேவைப்பாடு காணப்பட்டது .

அவர்கள் தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள். வவுனியா ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் மூடப்படுமாக இருந்தால் வவுனியா மாணவர்களுக்கு அதே நிலைமை ஏற்படும்.

ஒமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தினர் கற்கை நெறி தொடர்பில் தெரிவிக்கையில், 2020 ம் ஆண்டு அல்லது அற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இலவச முழுநேர உயர்கல்வி வாய்ப்பினை தொடர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (முழுநேரம் /பகுதிநேரம்) 04 ஆண்டுகள் உயர் தேசிய ஆங்கில  டிப்ளோமா (முழுநேரம் / பகுதிநேரம்) 02½  ஆண்டுகள்.

இக்கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களில் HNDA பூர்த்தி செய்பவர்கள் பல்கலைக்கழக பட்டத்திற்கு பிரதியீட்டுத் தகைமையினை பெறுவதுடன் அரச துறையில் பட்டதாரிகள் நியமனத்தின் போதும் தனியார் துறைகளில் இடைநிலைக் கணக்காளர்களாக வரமுடியும்.

மேலும்; HNDE பூர்த்தி செய்பவர்கள் தற்பொழுது ஆசிரியர் சேவையில் தகைமையாக கருதப்படுவதுடன் தனியார் துறையின் எதிர்பார்க்கைகளுக்கிணங்க தகைமையுடையவர்களாக வெளியேறுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத்திகதி 𝟑𝟏.𝟎𝟏.𝟐𝟎𝟐𝟐 என்பதுடன் மேலதிக விபரங்களுக்கு 𝟎𝟐𝟒𝟐𝟎𝟓𝟐𝟕𝟑𝟑, 𝟎𝟕𝟕𝟔𝟏𝟔𝟐𝟎𝟏𝟎, 𝟎𝟕𝟕𝟐𝟑𝟏𝟑𝟏𝟖𝟗, 𝟎𝟕𝟕𝟎𝟐𝟓𝟕𝟑𝟏𝟒 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தவும்.