வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் கணவன்-மனைவி இருவரும் வைத்தியசாலையில்!!

475

A1 A2

வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

A9 வீதி வழியாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் தாண்டிகுளம் சந்திப் பகுதியில் இருந்து திருநாவற்குளம் நோக்கி திரும்ப முற்பட்ட வேளையில் அதே வீதி வழியாக பின்னால் வந்த டிமோ பட்டா வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவியும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.