413 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார் ..

565

biscuit
அமெரிக்காவில் நடந்த ஒரு பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் பங்குபெற்ற ஒருவர் 413 பிஸ்கட் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 415 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டு சாதனை புரிய இருப்பதாக சவால் விட்ட Kevin Shalin என்பவர் 413 பிஸ்கட்டுகள் சாப்பிட்டவுடன் திடீரென மயங்கி விழுந்தார்.

கோமா நிலைக்கு சென்ற அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அளவுக்கு அதிகமான வெண்ணெய் அவருடைய உடலில் கலந்ததால், மூளைக்கு ரத்தம் செல்லும் பாதை அடைபட்டதாகவும் எனவே அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இரண்டே பிஸ்கட்டுகள் சாப்பிட்டிருந்தால் அவர் ஒரு புதிய சாதனையை புரிந்திருப்பார். ஆனால் அதற்குள் அவர் கோமா நிலைக்கு சென்றதால் போட்டி கைவிடப்பட்டது.
அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.