வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் மயங்கி வீழ்ந்த இருவர்!!

1024

போராட்டத்தில்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் இருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மாவட்ட செயலக வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் பொலிஸாரினால் 1990 நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சுகாதார பணியாளர் சிகிச்சையளிக்க முயன்ற போதிலும் அவர்கள் சிகிச்சையினை மறுப்பு தெரிவித்ததுடன்,

சீனியின் அளவு மற்றும் இரத்த ஓட்டம் என்பவற்றினையாவது பரிசோதிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் முயன்ற போதிலும் அவர்கள் சம்மதம் தெரிவிக்காது போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் அவர்களுக்கு தண்ணீர் தெளித்து வழமை நிலமைக்கு திருப்பியிருந்தனர். மயக்கமடைந்து வீழ்ந்து வழமை நிலமைக்கு திரும்பிய இருவரும் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றியிருந்தனர்.