வவுனியா நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!

1528

விபத்து..

வவுனியா, வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (25.01) இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக பூந்தோட்டம் வீதிக்குச் செல்ல முற்பட்ட போது,
வவுனியா நகரிலிருந்து வந்த பாரவூர்த்தி ஒன்று சுற்று வட்ட வீதியூடாக ஏ9 வீதியில் திரும்ப முற்பட்ட போது துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.