
தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது பொலிசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள பேக்புக் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அதில் எனது முகாமையாளர் என் பெயரைச் சொல்லி பெரும் தொகை வசூலித்து மோசடி செய்துவிட்டார். இரசிகர்கள் அவரிடம் தொடர்புகொண்டு இதுபற்றி கேளுங்கள் என்று குறிப்பிடபட்டிருந்ததுடன் செல்போன் நம்பர் ஒன்றும் தரப்பட்டிருந்தது.
இது பற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, எனக்கு முகாமையாளரே கிடையாது. இப்படியொரு தகவலை நான் வெளியிடவில்லை. என் பேஸ்புக் கணக்கில் யாரோ மர்ம நபர் ஊடுருவி இப்படியொரு தவறான தகவலை பரப்பிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக விரைவில் பொலிசில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன் என்றார்.





