வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

1306


கொரோனா..வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்ட செயலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் பகுதியில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் அவருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் அரச உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.