யானையிடம் போராடி தன் மகளின் உயரை காப்பாற்றிய தாய்!!

2524

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் உயிரை பணயம் வைத்து யானையிடமிருந்து மகளை காப்பாற்றிய தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தம்புத்தேகம, தெக்கவத்தை கிராமத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலை செல்வதற்காக தயாராக இருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தனது பாட்டியின் வீட்டில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.
இதன் போது திடீரென அவ்விடத்திற்கு வந்த காட்டு யானை சிறுமியை பல மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசிய நிலையில் அவரை மிதித்து கொல்ல தயாராகியுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு வந்த தாய் மற்றும் பாட்டி யானையுடன் நீண்ட நேரம் போராடி மகளை காப்பாற்றியுள்ளனர்.


குறித்த சிறுமியின் பாட்டி வீட்டு பக்கம் காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய சிறுமியும் அவரது தாயாரும் பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தாய் பாட்டின் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி தங்கள் வீட்டை நோக்கி சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த யானை சிறுமியை தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டு மிதித்து கொல்ல அங்கு வந்துள்ளது.


சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு வந்த தாயும் பாட்டியும் யானையிடம் போராடி சிறுமியை காப்பாற்றியுள்ளனர். உயிருக்கு ஆபத்தின்றி சிறிய காயங்களுடன் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.