காதலை கைவிட மறுத்த இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

1943


வினோத்குமார்..கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த காதல் விவகாரம் சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவர், பலமுறை வினோத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்றிரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பனான 18 வயது சிறுவன் என 2 பேரும் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக ஓசூர் அடுத்த வாசவி நகருக்கு சென்றுள்ளனனர்.


வாசவி நகர் வினோத்குமார் காதலித்து வந்த பெண்ணில் ஊர் என்பதால், அங்கு சென்ற வினோத்குமார் மதுஅருந்திவிட்டு காதலியின் அண்ணனுடன் மீண்டும் போனில் தொடர்புகொண்டு உங்கள் பகுதியிலேயே இருக்கின்றேன் தைரியமிருந்தால் வா என அழைத்ததாக சொல்லப்படுகிறது.

வினோத்குமார் வர சொல்ல இடத்திற்கு வந்த காதலியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் இருவரும் வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.


வாக்குவாதம் முற்றியநிலையில் காதலியின் அண்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியால், வினோத்குமாரின் மார்பில் இரண்டு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் ரத்த் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்தி்ற்கு வந்த போலீசார், வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொலை குற்றவாளியான காதலியின் அண்ணன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.