பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாத கணவன் : இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

906

சென்னை..

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள், அதனால் வெளியில் அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார் தனுஜா. சாமுவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் வெளியில் அழைத்து செல்லாததால் சண்டையிட்டுயுள்ளனர்.
இதனால் சமாதானம் செய்து வைக்க சாமுவேல் மாமியார் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பார்த்த போது தனுஜா தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாமுவேல் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி நான்கு மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக சாமுவேலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.