ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை நிறுத்துமாறு பெரியவர்கள் கண்டித்ததால், 22 வயதான யுவதி ஒருவர் தனது வயிற்றை கத்தியால் கிழித்து கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நவகத்தேகம, இங்கினிமிட்டி என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
22 வயதான இளம் யுவதிகள் இருவர் நீண்டகாலமாக ஒரே வீட்டில் வசித்து வந்ததுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
இந்த பழக்கத்தை கைவிடுமாறு வீட்டில் உள்ள மூத்தவர்கள் கண்டித்ததால் மனமுடைந்த ஒரு யுவதி தனது வயிற்றை கத்தியால் குத்தி கிழித்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
அவர் தொழில் புரிந்த இடத்தில் பணியாற்றி வந்த பிங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த சம வயதான யுவதிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு எல்லை மீறி சென்றுள்ளதுடன் இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்த விலகியதுடன் பிங்கிரிய யுவதியின் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




