நான் யாரையும் காதலிக்கவில்லை : சுருதி ஹாசன் ஆவேசம்!!

848

Sruthiநடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டியின் போது..

நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஹொலிவுட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே நடிக்க முடியும். இந்தியாவில் அப்படி இல்லை எல்லா மொழிகளிலும் இங்கு நடிக்கலாம்.

நல்ல படங்கள் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமாவில் என் பெற்றோர் துணையாக இருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் நிர்ப்பந்தம் எதுவும் எனக்கு இருந்தது இல்லை.

நான் யாரையும் இதுவரை காதலிக்க வில்லை. தனியாகத் தான் இருக்கிறேன். சினிமாவிலும் எனக்கு நண்பர்கள் கிடையாது. எல்லா நடிகர்களுமே அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாராய், நாகார்ஜூனாவை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். நானும் கால்ஷீட் ஒதுக்குவது பற்றி ஆலோசித்து வருகிறேன் என்று சுருதி ஹாசன் கூறினார்.