மன உளைச்சலால் தற்கொலை செய்த மாணவி : பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை!!

265

Studentஇங்கிலாந்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் வெஸ்ட் யார்க் சையர் மாநகரத்தை சேர்ந்த ஒலிவியா (15) தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். வெளியுலகிற்கு தான் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல் நடித்து வந்த ஒலிவியா, உண்மையில், பலவித தோல்விகளை சந்தித்த துக்கத்தில் வாடி வருந்தியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க் சையர் மாநகரத்தில், டாக் வாக்கர் என்ற காட்டுப் பகுதியில் ஒரு உயரமான மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஒலிவியாவின் தந்தை அலெக்ஸ் கூறுகையில், என் மகள் ஒலிவியா 15 வயதுடைய அழகிய பெண். நடனம், பாடகர் என பல கலைகளை தன்னகத்தே கொண்ட இவள் ஊடகங்கள், கைப்பேசி உரையாடல்கள், இணையதளம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

தனக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளை மனதில் கொண்டு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளார்.

மேலும் சிறு வயதில் மாணவ மாணவியர் தங்கள் சக்திக்கு மீறி 24 மணி நேரமும் ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதே இவ்வகையான மன உளைச்சலுக்குக் காரணம். பெற்றோர்கள் இதை அறிந்து அவர்களை நல்வழிப் பாதையில், நடத்த வழி வகுக்க வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய அபாயத்தை தனது பிள்ளைகள் அறிந்து கொள்ள உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒலிவியா, தனது இடுப்புப் பகுதியைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதை பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆகவே யாருக்கும் தெரியாமல், தனியாகச் சென்று ஒலிவியா தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது விருப்பத்திற்கேற்றபடி ஒலிவியாவின் பெற்றோர்கள், அவரது உடல் பாகத்தினை மூன்று நோயாளிகளுக்கு தானமளித்துள்ளனர்.