வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் நெற்கொழுதாசனின் கவிதைநூல் அறிமுக விழா அழைப்பிதழ்!!

403

Tamil

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் நெற்கொழுதாசன் எழுதிய ரகசியத்தின் நாக்குகள் கவிதை நூல் அறிமுகம் இன்று 12.04 .2014 மாலை 4.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையம் முன்பாகவுள்ள இந்திரன்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்விற்கு திரு இரா இராஜேஸ்வரன் (தலைவர் தமிழ் மாமன்றம்) அவர்கள் தலைமை தாங்கவுள்ளதுடன், நூல் நயத்தினை திரு்.நா.பார்த்தீபன் (விரிவுரையாளா் வவுனியாதேசிய கல்வியற் கல்லூரி) அவர்களும் கவி நயத்தினை வைத்திய காலநிதி செ.மதுரகன் அவர்களும் வழங்கவுள்ளனர்.

மேலும் நன்றியுரையினை திரு.ச.கஜன் (இணைச் செயலாளர் – தமிழ் மாமன்றம்) அவர்களும், நிகழ்ச்சித் தொகுப்பினை திரு.கி. நிக்சலன் (இணைச் செயலாளர்- தமிழ்மாமன்றம்) அவர்களும் வழங்கவுள்ளனர்.

இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.