ஐ.சி.சி புதிய விதிமுறையின்படி சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!!

253

ICCடெஸ்ட் போட்டிகளில் சிறிய அணிகள் விளையாட தகுதிப்போட்டி நடத்த ஐ.சி.சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

8 அணிகள் மட்டுமே சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நிரந்தரமான தகுதியை பெற்றுள்ளன. வங்கதேசம், சிம்பாவே ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து போராடி வருகின்றது.

ஐ.சி.சியின் இப்போதைய புதிய முடிவால் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட அணிகளும் டெஸ்ட் போட்டிக்கான தகுதியைப் பெற வாய்ப்பு கிடைக்கும்.

டெஸ்ட் தகுதி போட்டிக்கு ஐசிசி டெஸ்ட் சலஞ்ச் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போட்டி மூலம் ஐ.சி.சியில் உறுப்பினராக உள்ள பல நாடுகள் பயனடையும் என்று ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளுக்கான திட்டமிடுதல், நிதி நிர்வாகம் செயல்பாடுகள் குறித்து பல முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. சமீபத்தில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த வங்கதேச கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.சி.சி கூட்டத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.