ஓரினச்சேர்க்கை மோகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்!!

337

Homo

ஓரினச்சேர்க்கை மோகத்தால் கட்டிய மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கியில் ஐ.டி. தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர், ஜஸ்விர் ராம் கிண்டே(29). இந்தியரான இவருக்கும், இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் வர்கா ராணி(24) என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இல்லற வாழ்க்கையை நல்லறமாய் ஆரம்பிக்க சென்ற ராணி, தனது கணவனுக்கு பெண்களை விட ஆண்கள் மீது அதிக ஈடுபாடு உள்ளதை அறிந்த ராணி, திகைத்துப் போனார்.

ஆண்களுடன் உடல் தொடர்பு வைத்துக் கொள்ளும் நீங்கள் அந்த உண்மையை மறைத்து, என்னை திருமணம் செய்து, என் வாழ்க்கையை பாழடித்தது ஏன் என்று கணவனுடன் தகராறு செய்யத் தொடங்கியுள்ளார்.

சம்பவத்தன்று, இருவருக்கும் இடையிலான வாய்த் தகராறு வலுக்கவே, ஆத்திரமடைந்த ஜஸ்விர் ராம் வீட்டில் இருந்த வக்யும் கிளீனர் உடன் இணைக்கப்பட்டிருந்த இரும்பு குழாயை எடுத்து ரானியை தாக்கியுள்ளார்.

மயங்கி விழுந்த அவரது கழுத்தை நெறித்துக் கொன்ற பிறகு, பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் குப்பைகளை எரிக்கும் இயந்திரத்தில் போட்டு எரித்தார்.
அதில் இருந்து வந்த புகையில் பிணத்தை கொளுத்தும் துர்நாற்றம் வீசவே சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர் மறுநாள் பொலிசிற்கு தகவல் அளித்தனர்.

பொலிசார் சென்று பார்த்தபோது, சாம்பலுடன் எலும்புகளும் இருப்பதை கண்டு ஜஸ்விர் ராமை கைது செய்தனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இன்று நடந்த இறுதிகட்ட விசாரணையை பார்வையிட இந்தியாவில் இருந்து ராணியின் பெற்றோர் வந்திருந்தனர்.

7 பெண் நீதிபதிகள், 5 ஆண் நீதிபதிகள் என மொத்தம் 12 நீதிபதிகள் முன்னிலையில் 17 மணி நேரம் இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், குற்றவாளி ஜஸ்விர் ராம் கிண்டேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.

தண்டனை காலத்தில் 21 வருடங்களை நிறைவு செய்யும் வரை குற்றவாளியை பிணையில் விடுவிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.