ரஜினிக்கு பிடித்த பஞ்ச் டயலாக் எது தெரியுமா?

238

Rajani

ரஜினி தனது படத்தில் பேசும் பன்ச் டயலாக்தான் அவரது இரசிகர்களின் வேத மந்திரம். நான் ஒருதடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி…என் வழி தனி வழி போன்ற வசனங்கள் இரசிகர்களுக்கு பிடித்தமானவை.

நாயகனாக நடித்த ரஜினி கூறிய பன்ச் டயலாக்கினை விட அவர் 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த போது சொன்ன இது எப்படி இருக்கு வசனம் இன்னமும் பிரபலமாக உள்ளது. இரசிகர்களுக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் இதுதான் பிடித்த வசனமாம். இதை ரஜினியே கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரஜினியின் பேட்டி ஒளிபரப்பாகிறது. நடிகர் விவேக் பேட்டி காண்கிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் பேட்டி ஒளிபரப்பாகப்போகிறது என்பதால் இது குறித்த முன்னோட்டத்தை குறித்த தொலைக்காட்சியினர் ஒளிபரப்பிவருகின்றனர்.

தன்னுடைய திரையுலக பயணம் பற்றி இந்தப் பேட்டியில் மனம் திறந்துள்ளார் ரஜினி. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கோச்சடையான் திரைப்படம் பற்றியும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினியின் பன்ச் டயலாக் பற்றி பேசிய விவேக், உங்களோட பன்ச் டயலாக் எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு டயலாக் பேசுங்களேன் என்று கேட்ட உடன், இது எப்படி இருக்கு என்று கேட்டு தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்க்கிறார் ரஜினி.

உங்களுக்கு பிடித்த பன்ச் டயலாக் என்ன என்று விவேக் கேட்ட உடன், இது எப்படி இருக்கு அதுதான் எனக்கும் பிடிக்கும் என்று கூறுகிறார் ரஜினி. இந்த டயலாக் பேசப்பட்டு 40 வருடங்களை எட்டப்போகிறது. ரஜினி தனது படங்களில் எத்தனையோ பன்ச் டயலாக் பேசிவிட்டார். ஆனாலும் ஹீரோ பேசியதை விட வில்லன் பேசிய பன்ச்தான் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.