இலங்கையில்10 வீதமானோர் இணையத்தள பாவனையாளர்கள்!!

276

Internet2012 இல் 17 வீதமானோர் நிலையான தொலைபேசிகளை பயன்படுத்தியதுடன், 2013 இல் அந்த எண்ணிக்கை 13.2 வீதமாக வீழ்ச்சியுற்றுள்ளது.

2013 ஆண்டு நிறைவடைகையில் ஒவ்வொரு நூறு பேரிலும் 99.2 வீதமானோர் கையடக்க தொலைபேசி வைத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்10 வீதமானோர் இணையத்தள பாவனையாளர்கள் – மத்திய வங்கி 2013 ஆம் ஆண்டின் இறுதியில், நூற்றுக்கு 10 பேர் இணையத்தள பாவனையாளர்கள் என மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆண்டில் இணையத்தள இணைப்புகளின் எண்ணிக்கை 47 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பொதுவாக கையடக்க தொலைபேசிகள் ஊடான இணையப் பாவனையே இதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்று அந்த அறிக்கைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய DATA PACKAGE இன்றி கையடக்க தொலைபெசிகள் ஊடாக இணையதள பாவனையில் ஈடுபடுவோர் மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதால் உண்மையான இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.