கோஹ்லியை முந்திய டோனி!!

467

Dhoni

கிரிக்கெட் உலகில் திடீர் சரிவை சந்தித்தாலும் விளம்பர உலகில் இந்திய அணித்தலைவர் டோனி கொடி கட்டிப்பறக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர மொடலாக தோன்ற 8 கோடி பெற்றார்.

இந்த நேரத்தில் அடிடாஸ் நிறுவனத்துடன் 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்த கோஹ்லி, முதலிடத்துக்கு முந்தினார். தற்போது டோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இவரது வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பு 8 கோடி பெற்ற இவர், இப்போது ஒரு பொருளுக்கு மொடலாக தோன்ற 13 கோடி சம்பளமாக பெறுகிறார்.

மேலும் எக்சைட், பெப்சி, ஏர்செல், ரீபோக் உள்ளிட்ட 21 பொருட்களுக்கு மொடலாக உள்ளார். விளம்பரங்களில் தோன்ற அதிக தொகை பெறுபவர்கள் வரிசையில் நடிகர் அமீர் கானுக்கு அடுத்த இடத்தை டோனி பிடித்துள்ளார்.