வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிவராத்திரி பெருவிழா!!

3544


சிவராத்திரி பெருவிழா..வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடு நேற்று (01.03.2022) சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதம குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்த அடியார்கள் புடைசூழ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் பூஜைகளும் இடம்பெற்றன.


மேலும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களையும் இதன்போது நிறைவேற்றி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானின் அருட் கடாற்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் பொலிசாரும் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.