வவுனியா பறண்நட்டகல் பகுதியில் பனைசார் கைப்பணிப் பொருட்கள் நிலையம் திறந்து வைப்பு!!

1432

கைப்பணிப் பொருட்கள் நிலையம்..

வவுனியா பறண்நட்டல் கிராமத்தில் பாரம்பரிய மற்றும் கிராம கைத்தொழில் கிராமங்கள் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பனைசார் கைப்பணிப்பொருட்கள் நிலையம் திறந்து இன்று (05.03.2022) காலை 9.30 மணியளவில் வைக்கப்பட்டது.

தேசிய அருங்கலைகள் பேரவையின் நிதியுதவியில் புரனமைக்கப்பட்ட இவ் கட்டிடத்தின் பெயர்ப்பலகை மற்றும் கட்டிடத்தின் நாடாவினை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பு குழு தலைவரின் இணைப்பு செயலாளர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

அப்பகுதி கிராம அலுவலகர் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவரின் இணைப்பு செயலாளர் டினேஸ் , மாவட்ட பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம சேவையாளர், பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.