மதுபோதையில் வாகனம் செலுத்திய 586 பேர் கைது!!

491

Vehicle Driversமதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் ஆரம்பித்துள்ள விஷேட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 586 பேர் கைதாகியுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதலான கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் மூன்று பஸ் சாரதிகள், 116 மோட்டார் சைக்கிள் சாரதிகள், 74 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் 14 ஏனைய வாகன சாரதிகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விஷேட சுற்றிவளைப்புக்கள் எதிர்வரும் 20 திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.