ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பைகள் : அதிகாரிகள் அதிர்ச்சி!!

313

jug

ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜேர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜேர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள சென் ஸ்டோரில் ஹிட்லரின் உருவப்படத்துடன் ஸ்வஸ்திக் குறியீடு மற்றும் சிறு குறிப்புடன் தேநீர் கோப்பைகள் விற்கப்பட்டு வந்தது அங்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயின் ஸ்டோரின் உரிமையாளர் கிறிஸ்டியன் சர்பிரக்கன் இது குறித்து, 75 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் வியாபாரத்தில் உள்ளது ஆனால் இதுபோன்ற அசிங்கம் எதுவும் நிகழ்ந்ததில்லை என்று கூறியுள்ளார்.

சீனாவிலில் உள்ள ஒரு தயாரிப்பாளரிடமிருந்து இந்த தேநீர் கோப்பைகள் ஓர்டர் செய்யப்பட்டதாம்.

1.99 யூரோக்களுக்கு இந்தக் கோப்பைகள் விற்கப்பட்டுள்ளன. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை, கடைசியாக தெரியவந்தபோது விசாரணையில் சிக்கியுள்ளது அந்த செயின் ஸ்டோர்.

இந்த கோப்பையை வாங்கியவர்கள் அதனை திருப்பி கொடுத்தால் 20 யூரோ பரிசுக்கூப்பன் அளிக்கப்படும் என்று அந்த செயின் ஸ்டோர் கூறியுள்ளது.

இதுவரை விற்றுள்ள 175 தேநீர் கோப்பைகளில் 16 கோப்பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. விற்கப்படாத கோப்பைகள் உடைத்து எறியப்பட்டுள்ளன.