வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தந்தை, மகன் பலி : மன்னார் வீதியில் டயர் எரித்து இளைஞர்கள் எதிர்ப்பு!!

5633

டயர் எரித்து எதிர்ப்பு..

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர் எரித்து இளைஞர் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வருகைதந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த,

தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான பேரூந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

குறித்த விபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்தவர்களின் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இரவு 8.00 மணியளவில்,

டயர்களை எரிந்து போராட்டம் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வருகைதந்து நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.