
பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் லக்ஷ்மி மேனன், இந்த திரைப்படத்திற்காக கொஞ்சம் அதிகமாகவே ரொமான்ஸ் காட்சியில் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.
விஷாலுக்கும் லக்ஷ்மி மேனனுக்கும் காதல் என்று திரையுலகிலும் பேசப்படுவதால், அவரது அனைத்துப் பேட்டிகளிலும் விஷாலை லவ் பண்றீங்களா இல்லையா இந்தத் தகவலை நம்பலாமா நம்பக்கூடாதா என்ற கேள்விகள் தான் கேட்கப்படுகின்றன.
இந்த கேள்விக்கு ஒரே பதிலைச் சொல்லி அலுத்துப்போன லக்ஷ்மி மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நான் விஷாலை காதலிக்கவில்லை. ஆனால் அவர் என்னை காதலிக்கிறாரா என்று எனக்குத் தெரியாது என்று படையப்பா படத்தில் மாப்ள இவர் தான். ஆனா அவர் போட்ருக்க சட்டைய பத்தி எனக்குத் தெரியாது என்ற வசனத்தைப் போலவே கூறியிருக்கிறார்.





