தெற்கு அதிவேக வீதியில் 24 மணித்தியாலத்தில் 24,000 வாகனங்கள் 58 இலட்சம் ரூபாய்கள் வருமானம்!!

660

Highways

தெற்கு அதிவேக வீதியில் நாளொன்றில் பயணித்த அதிகமான வாகனங்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளன. நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் 24,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் 58 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள, தமிழ் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அதிவேக வீதியில் கட்டணங்கள் குறைக்கப்பட்டமையே, வாகன போக்குவரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி அறிவுரைக்கமைய கடந்த 10ம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை அதிவேக வீதியில் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.