133 பயணிகளுடன் எரிந்து விபத்திற்குள்ளாகிய சீன விமானம் : ஏராளமானோர் பலி!!

1097


சீன விமானம்..

China plane crash.

133 பேருடன் பயணித்த சீன விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்றே இவ்வாறு, தென் சீனாவில் உள்ள தெங்சியான் கவுண்டி பகுதியில் மலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.China plane crash.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரானன குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.