யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் 22 வயதுப் பெண்ணின் சடலம் : கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்!!

613

Body

யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் குருநகரைச் சேர்ந்த கொன்சலிற்றா ஜெரோமி என்ற 22 வயதுடைய யுவதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.