நைஜீரியா சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு : 70 பேர் உடல் சிதறி பலி!!

633

Nigeria

நைஜீரியா நாட்டில் பேருந்து நிலையத்தில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 70 பேர் பலியாகினர். 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில், போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நைஜீரிய தலைநகர், அபுஜாவின் புறநகர் பேருந்து நிலையத்தில், ஒரு பேருந்தில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த, இரண்டு குண்டுகள் வெடித்தன.

நெரிசல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 70 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த 125 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் 40 வாகனங்கள் சேதமடைந்தன.

குண்டு வெடித்த இடத்தில் 4 அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அந்நாட்டு அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.