வவுனியா – செட்டிகுளம் கப்பாச்சியில் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்வேக்ஸ்!! (படங்கள்)

348

செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் தந்தையை இழந்து வறுமையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல் இருந்த 45 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட் வேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் 12.04.2014 அன்று கப்பாச்சி பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் )வவுனியா மலேரியா தடை இயக்க பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர் மயூரதாசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கேதீஸ்வரி, சமுர்த்தி உத்தியோகத்தர் பிரேம்குமார், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயான், வவுனியா மலேரியா தடை இயக்க ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் உரையாற்றிய தயான் பெற்றோரை இழந்து வாடும் இந்த மாணவர்களுக்கு உதவிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்வேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்கும் ,ஏற்பாடு செய்த தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைபிட்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் இது போல இருக்கும் எமது மாணவ செல்வங்களின் கல்விக்கும் மனமுவந்து எல்லோரும் உதவ வேண்டும் என கேட்டு கொண்டார் .

நிகழ்வில் உரையாற்றிய பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர் மயூரதாசன், எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு யாவரும் உதவ வேண்டும் என்றும் இன்று இந்த மாணவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அமர்ந்தார்.

தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் )ஸ்ரீ வெங்கடேஸ்வரா நெட்வேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டதுடன் அடுத்து தட்டான்குளத்தில் தந்தையை இழந்த 40 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயான் மற்றும் அந்த ஊர் வாழ் மக்கள் கேட்டுகொண்டதுக்கு இணங்க வழங்க ஏற்பாடு செய்ய பட்டுளதாகவும் மேலும் பல கிராமங்களில் இருந்து உதவிகள் கோர பட்டுளதாகவும் தான் புலம் பெயர் உறவுகள், உதவும் மனம் கொண்ட அமைப்புகளிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் சாதகமான பதில் தந்தால் அந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் எனவும் குறிபிட்டார்

அபிவிருத்தி உத்தியோகத்தர் கேதீஸ்வரி, தனதுரையில் அடக்கி ஒடுக்கபட்ட எம் இனத்திடம் மனோபலம் என்னும் இருபதாகவும் அனால் பணபலம் இல்லை எனவும் கூறியதுடன் எல்லோரும் சுயநலத்துடன் ஜோசிக்கும் போது ஒரு சிலராவது பொது நலத்துடன் ஜோசித்து உதவுவதால் தான் எம் இனம் இன்னும் முன்னேறுவதாகவும் இனி வரும் காலங்களில் கல்வி தான் எம் இனத்தை நிமிர செய்யும் எனவே எம் இனத்தின் கல்வி வளர்ச்சிக்கு தயவு செய்து முடிந்தவர்கள் உதவுங்கள் என்று குறிபிட்டார் .

பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன . இறுதியில் மாணவி அபிராமி தனது நன்றி உரையில் தான் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் பயின்று சித்தியடைந்து தற்போது உயர்தரத்துக்கு சென்றுள்ளதாகவும் மிகவும் சிரமத்தின் மத்தியில் பல மைல் தூரம் சென்று கல்வி கற்று உயர்தரம் வந்துள்ளதாகவும் தனக்கு இந்த கற்றல் உபகரணங்கள் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக தெரிவித்த அவர் எங்கள் கிராமத்துக்கு இந்த உதவியை செய்த ரீ வெங்கடேஸ்வரா நெட் வேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்கும் ஏற்பாடு செய்த தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார்(கண்ணன் ) அண்ணா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

11 12 13 14 15