இந்தியத் தேர்தல் : இதுவரை ரூ.260 கோடி பறிமுதல்!!

573

Moneyஇந்தியா முழுவதும் தேர்தல் அதிகாரிகள் வேட்டையில் இதுவரை 260 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த 7ம் திகதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.

நாளை 5ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உரிய ஆவணம் இல்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை நாடு முழுவதும் 260 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக ஆந்திர மாநிலத்தில் மட்டும் 129 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 33 கோடியும், 3ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 20 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இம்முறை தேர்தலில் தொழில் அதிபர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். இதனால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்றனர்.