தமிழில் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை : அதிர்ச்சியில் ஹன்சிகா!!

545

Hansikaவாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம்.

சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது.

இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15 இலட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன் என்றும், ஆனால் வாலு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க ஹன்சிகா மறுப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் இகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஹன்சிகாவிடமும் விசாரணை நடக்கிறது. வாலு படத்தை முடித்து கொடுக்கும்படி ஹன்சிகாவிடம் பட அதிபர் சங்கம் வலியுறுத்துகிறது.

இதைக் கேட்க மறுத்தால் தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.