இலங்கைக்கு அமெரிக்கா புதிய நிபந்தனை!!

496

NIsha

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டால் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இந்த நிபந்தனை அறிவிப்பை இன்று விடுத்துள்ளார். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிஷ்டவசமாக இலங்கையில் சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிஷா பிஸ்வால், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் நம்பகமான ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.