தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னல் தொடர்கிறது : கோட்டபாய ராஜபக்ஷ!!

355

Kotta

சர்வதேசத்தின் தேவைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அடிப்படையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் ஜனநாயக போர்வையில் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் நடைபெறும் 14வது பாதுகாப்பு சேவையின் ஆசிய கண்காட்சியில் உரையாற்றும் போதே கோட்டாபய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் வலைப்பின்னலின் மூலம் இலங்கைக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை நாடுகளில் உள்ள முன்னணி அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை.

1993- 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு 75 மில்லியன் டொலர்களை வரை வருடாந்த நிதிகள் கிடைத்து வந்தன. 2002 -2008 காலப்பகுதியில் அவர்களுக்கு 200 மில்லியன் டொலர்கள் கிடைத்தன என்றும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.