14 வயது சொந்த மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!!

574

Abuse14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்வந்த வர்த்தகர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக சொந்த மகளை குறித்த தாய் பெருமளவு பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

நட்சத்திர ஹோட்டல்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக குறித்த வர்த்தகர்கள் பெருந்தொகை பணத்தை தாய்க்கு வழங்கியுள்ளனர்.

குறித்த பெண்ணும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், தாயும் மகளும் பாலியல் தொழில் மூலம் நாள் ஒன்றுக்கு 60,000 ரூபா முதல் 90,000 ரூபா வரையில் பணம் சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பாதித்த பணத்தை மகளுக்கு வழங்காமையினால், முரண்பட்ட மகள் இது குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதான பெண் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.