இலங்கையில் இணையத்தின் ஊடாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!!

344

To match feature: INTERNET-SOCIALMEDIA/PRIVACYஇணையத்தின் ஊடான சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்துச் செல்வதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்று வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் இணையப் பழக்கத்தில் அதிக நாட்டம் காட்டுவதாகவும் இதனை பயன்படுத்தி சிலர் சூட்சமமான முறையில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முகநூல் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.