ஈழத்துக் கலைஞர்களின் வித்தியாசமான படைப்பு : 10 சோடி கால்கள் மட்டும் நடிக்கும் குறும்படம்!!(வீடியோ)

792

Thodariயாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் ஆய்வம் என்ற குழு சென்ற மாதம் மிச்சக்காசு என்ற 1080p HD தரத்திலான மொபைல் குறும்படத்தை வெளியிட்டு ஈழ குறும்படத்துறையில் மொபைல் புரட்சி ஒன்றை நிகழ்த்திக்காட்டியிருந்தது.

பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படைப்பு சிறந்த திரைக் கதைக்கான விருதையும். நோர்வே சர்வதேச தமிழ்த் திரைப்படவிழாவில் திரையிடவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகையில் விமர்சனமும் பாராட்டும் இப்படைப்பு பெற்றிருந்தது.

அக்குழுவால் “தொடரி“ என்ற பெயரில் நேற்று மீண்டும் ஒரு மொபைல் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இக்குறும்படத்தில் 10 சோடி கால்களும் ஒரு சோடி கையும் மட்டுமே நடித்துள்ளது. (எவர் முகங்களும் காட்டப்படவில்லை)ஈழத் திரைத்துறைப் பிரபலங்களின் பாராட்டைப் பெற்றுள்ள இப்படைப்பை நீங்களும் கண்டுகளியுங்கள்.