வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!

840


மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி..



வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (28.04) முன்னெடுக்கப்பட்டது.



வவுனியா காமினி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது அங்கிருந்து மன்னார் வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பசார் வீதிக்கு சென்று அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக சென்று கண்டி வீதியில் முடிவடைந்தது.




குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கோட்டா – மஹிந்த அரசே பதவி விலகு, எரிபொருள் விலையை குறை, பொருட்களின் விலையை ஏற்றாதே, அரசாங்கமே வீட்டுக்கு போ’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரிய சங்கத்தினர், அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சேவையாளர் சங்கம், வெகுஜன அமைப்புக்கள், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், மின்சார சபை ஊழியர் சங்கம், நீர்பாசன திணைக்கள ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.

சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக மன்னார் வீதி மற்றும் கண்டி வீதியிவ் போக்குவரத்து நெரிசல் சில மணிநேரம் ஏற்பட்டிருந்தது.